மீனாட்சி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன வரிசை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளி கள், கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிப்பது தொடர் பான உத்தரவை தீவிரமாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக் குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எப்போதும் பக்தர் கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயிலுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் தரிசனம் செய்வதற்கு வசதியாக தனி வரிசை அமைக்க வேண்டும் என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கடந்த மே 23-ல் கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதத்தின் அடிப்படை யில் அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதிக கூட்டம் காரணமாக முதியோர், கர்ப்பிணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர். அதேநேரத்தில் முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு வரிசையில் சென்று எளிதில் தரிசனம் செய்து திரும்புகின்றனர். எனவே, முதி யோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வருவோர் மற்றும் கர்ப்பிணிகளை சிறப்பு வரிசையில் தரிசனத்துக்கு அனு மதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. வழக்கு முடித்து வைப்பு இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘‘முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வருவோர் மற்றும் கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க வேண்டும் என கோயில் பணி யாளர்களுக்கு 26.11.2018-ல் மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோயில் இணை ஆணையரின் உத்தரவை முழுமை யாக நடைமுறைப்படுத்த உத்தர விட்டதோடு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment