உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Thursday, June 6, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவசமாக படிக்க முடியும். நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இன்று (ஜூன் 7) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்து சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் 20-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 3,500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment