இளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது தடையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு 

இளையராஜாவின் அனுமதியின்றி அவருடைய பாடல்களை பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில், ‘எக்கோ, அகி, கிரி போன்ற இசை நிறுவனங்கள் என்னுடைய அனுமதியின்றி நான் இசையமைத்த திரைப்பட பாடல்களை விற்பனை செய்து கோடி, கோடியாக லாபம் ஈட்டி வருகின்றன. நான் இசையமைத்த பாடல் களுக்கான முழு உரிமையும் என்னிடம் தான் உள்ளது. எனவே என்னுடைய பாடல்களை எனது அனுமதியின்றி பயன் படுத்த மற்ற இசை நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி இருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜாவின் பாடல் களை உரிய அனுமதிபெறாமல் சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, இளையராஜா வின் பாடல்களை அவருடைய அனுமதி யின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்து நீதிபதி உத்தர விட்டார். அந்த உத்தரவில், ‘‘இளைய ராஜாவின் பாடல்களை திரையரங்கு களைத் தவிர்த்து வேறு எங்கும் பயன் படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் நிறுவனங்கள், ரேடியோ நிறுவனங்கள் மற்றும் இசை நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடாது. இளையராஜாவின் பாடல்களை பயன் படுத்த வேண்டுமெனில் முறையான அனுமதி பெறவேண்டும்’ என உத்தரவிட்டு இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக தனியார் இசை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment