தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எம்.ஏ., எம்.எஸ்சி. 2 ஆண்டுகள் கொண்ட படிப்புகள், எம்.பில்., - ஓர் ஆண்டு ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சிற்பம், இசை, நாடகம், ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடி, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல், அயல்நாட்டுத்தமிழ்க் கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூக அறிவியல், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல், இலக்கியம், மொழியியல், தத்துவம், பழங்குடி மக்கள் ஆய்வு, நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியம், சித்த மருத்துவம், தொல் அறிவியல், தொழில் மற்றும் நில அறிவியல் (நிலத்தியல்), நூலகம் மற்றும் தகவல்அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் விருப்பமான துறையை தேர்வு செய்து படித்து ஆய்வு செய்வது பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். பல்கலைக்கழக இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய விண்ணப்பக் கட்டணத்துடன் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம். பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரிலும் அல்லது அஞ்சல் வழியாகவும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். ஜூன் 15-ந்தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.tamiluniversity.ac.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment