கடந்த ஆண்டுபோல நீட் தேர்வில் இருந்து ஆயுஷ் படிப்புகளுக்கு விலக்கு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது: நீட் தேர்வால் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். ரத்து செய்ய வேண்டும் கடந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றதுபோல, இந்த ஆண்டும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி, விலக்கு பெற வேண்டும். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், மருத்துவ கவுன்சில் விதியில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதற்காக, தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். சமூக நீதிக்கு எதிரானது திறந்த போட்டி இடங் கள் அனைவருக்கும் உரிய தாகும். அதை இடஒதுக்கீடு இல் லாதவர்களுக்கான இடஒதுக் கீடாக மாற்றிவிட்டு, ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் இடஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே இடங்களை பெற வேண் டும் என்பதுபோன்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது. இடஒதுக்கீடு இல்லாத பிரிவு என ஒரு புதிய பிரிவை உருவாக்குவது சமூகநீதிக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment