மருத்துவ கலந்தாய்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் பதிவிறக்கம் தொடக்கம்

மருத்துவ கலந்தாய்வு விண்ணப் பங்களை இன்று முதல் (ஜூன் 7) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொதுவாகவே, தட்ப வெட்ப நிலை மாறும்போது நோய்த் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு உண்டு. அதற்கேற்ப தமிழ்நாடு அரசு எப்போதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறது. மருத்துவ கலந்தாய்வு விண் ணப்பங்களை ஆன்-லைனில் ஜூன் 7-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு வழக்கம்போல நேரடியாகவே நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment