அரசு டாக்டர்கள் இடமாற்றத்துக்கு தடை

தமிழகத்தில் தற்போது பணிபுரிந்து வரும் 15-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்களை பணிமாற்றம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் பணியில் உள்ள அரசு டாக்டர்கள் 860 பேரை கட்டாய பணியிட மாற்றம் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் கடந்த மாதம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் தற்போது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் பணியிட மாறு தலுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த அரசு டாக்டர் களான சரவணப்ரியா, நிம்மி சிவக்குமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக நடந்தது. அப் போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறி ஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி இந்த கலந்தாய்வு முறையாக நடைபெற வில்லை. மூத்த டாக்டர்கள் கட்டாயப் படுத்தி பணிமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர், என குற்றம் சாட்டினார். அதையடுத்து நீதிபதி, மனுதாரர்களை மட்டும் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என உத்தரவிட்டு அவர்களின் பணியிட மாறுதலுக்கு தடை விதித்துள்ளார்.

No comments:

Post a Comment