தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு முறைகேடுகள் இன்றி நடைபெற கல்வியாளர்கள் வலியுறுத்தல்

 தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக் கீட்டில் சேர விண்ணப்பித்தவர் களுக்கு அதிகாரிகள் முன்னிலை யில் இன்று குலுக்கல் நடை பெறுகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை யற்ற தனியார் பள்ளிகளில் 25 சத வீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்நிலையில் நடப்பு கல்வியாண் டில் இலவச மாணவர் சேர்க்கைக் கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22 முதல் மே 18-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதி யற்ற 7 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மீதமுள்ள 1.13 லட் சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன. இதில் ஆதரவற்ற வர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர் களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31-ம் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், 25 சதவீத ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக விண்ணப்பங்கள் வந்த 3 ஆயிரம் பள்ளிகளில் தகுதியான எல்லோ ருக்கும் சேர்க்கை ஆணை அளிக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகமான விண்ணப்பங்கள் பெறப் பட்ட பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (ஜூன் 6) குலுக்கல் நடைபெற உள்ளது. குலுக்கலில் தேர்வாகும் குழந் தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்ட ணமும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இலவச சேர்க் கையில் தேர்வான குழந்தைகளின் விவரம் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) வெளியிடப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்கு நரகம் தெரிவித்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இணைய தளம் செயல்படாமல் முடங்கியுள் ளது. சேர்க்கை முறைகேடின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடை பெறுவதை உறுதிசெய்ய அதன் விவரங்களை தெரிவிப்பதுடன், குலுக்கல் தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண் டும் என கல்வியாளர்கள் வலி யுறுத்தியுள்ளனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment