நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு காவல் துறை நிதியுதவி

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி ஜீவிதாவுக்கு காவல்துறை சார்பில் ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் தையல் தொழிலாளி பன்னீர்செல் வம். இவரது மகள் ஜீவிதா, அரசு பள்ளியில் படித்து, விடாமுயற்சி யால் நீட் தேர்வில் 720 மதிப் பெண்ணுக்கு 605 மதிப்பெண் பெற் றுள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தரப் பில் இருந்தும் மாணவி ஜீவிதா வுக்கு வாழ்த்துகளும், ஆதரவும் குவிந்துவருகின்றன. ஜீவிதாவின் கல்விச் செலவுக்கு முன்பணமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சேமிப்பில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்நிலையில், காவல் துறை சார்பில் மாணவிக்கு ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்லாவரம் காவல் உதவி ஆணையர் கேபிஎஸ் தேவராஜ் தலைமையில் காவல் துறையினர் மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறி பணத்தை வழங் கினர். இன்னும் உதவி தேவைப் பட்டால், தயங்காமல் கேட்குமாறும் தெரிவித்தனர். இதேபோல, உறவினர் நாகரா ஜன் என்பவர் ரூ.10 ஆயிரம் அளித் தார். திமுக போக்குவரத்து தொழிற் சங்கம் சார்பில் ரூ.5 ஆயிரம், ஆசிரி யர் சங்கம் சார்பில் ரூ.2 ஆயிரம் உதவி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பலர் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததாகவும், உதவி தேவைப்பட்டால் செய்வ தாக உறுதி அளித்துள்ளதாகவும் மாணவி ஜீவிதா கூறினார்.

No comments:

Post a Comment