தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட ஒரு மாதம் காலஅவகாசம் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு: தமிழகத்தில் 7,600 தனியார்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2018 - 2021 கல்வி ஆண்டுகளில் வசூலிக்க வேண்டிய கல்விக்கட்டணத்தை தமிழகக் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இதுவரை நிர்ணயம் செய்ய வில்லை. இதனால் பல தனியார் பள்ளிகளில் 2018 - 2019-ம் கல்வி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட தைக் காட்டிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் 2018-2021 ஆண்டுக் கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து இணையதளத் தில் வெளியிட தமிழகப் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு வுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரத்தை ஏப்ரல் மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்நிலையில் கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட அவகாசம் கேட்டு அரசு சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி நேற்று விசாரித்தனர். அப்போது 2018-2021-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட 3 மாதங்கள் அவ காசம் வழங்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக் கப்பட்டது. இதையேற்க மறுத்து ஒரு மாதம் மட்டும் அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment