தேர்வில் காப்பியடிக்க லஞ்சம் கேட்ட பல்கலை. உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வில், மாணவர்கள் காப்பியடிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக தொலைநிலை கல்வியில் பி.எட் பயிலும் மாணவ, மாணவி களுக்கான தேர்வு கடந்த மே 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்வி யியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரி யர் ஆர்.முத்தையன்(56) கண் காணிப்பு அலுவலராக இருந்தார். அந்த மையத்தில், 200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அப்போது, ஒவ்வொரு மாண வரும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், தேர்வில் காப்பி அடித்துக் கொள்ளலாம் என தொலைநிலை கல்வி மைய நிர்வாகிகளிடமும், மாணவர்களிடமும் முத்தையன் கூறியதாக தெரிகிறது. இதற்கு நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளிடம் உதவிப் பேராசிரி யர் முத்தையன், செக்கிங் என்ற பெயரில் அத்துமீறி, அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியனுக்கு தொலைநிலை கல்வி மைய நிர்வாகத்தினர் புகார் அனுப்பினர். இதுதொடர்பாக துணை வேந்தர் பாலசுப்பிரமணியன் அமைத்த குழுவினர் விசாரணை நடத்தியபோது, புகாரில் கூறப் பட்ட சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. மேலும், பல்கலைக் கழகத்திலும் பல்வேறு முறை கேடுகளில் முத்தையன் ஈடுபட்டதாகவும் அறிக்கை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் முத்தையனை பணியிடை நீக்கம் செய்து துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment