ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுப்பிரமணியம் பணி இடைநீக்கம் ஓய்வுபெறும் நாளில் நடவடிக்கை

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான மு.சுப்பிரமணியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி நேற்று முன்தினத்துடன் ஓய்வு பெறுவதாக இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் மாலை அவர் மீது ஏற்கனவே இருந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி பணி இடைநீக்கம் செய்வதாக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சுப்பிரமணியம் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்களில் முக்கியமானவர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர். எனவே அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அரசு இப்படி செய்து இருக்கிறது என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நாளை (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தியாகராஜன் கூறுகையில், ‘பழிவாங்கும் நடவடிக்கையாக சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக பணி இடைநீக்கத்தை ரத்து செய்து முறையாக ஓய்வை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment