கல்வி நடைமுறையை ஒழுங்குபடுத்த  மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், "மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதமே முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைமுறை தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரியில்தான் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதுநிலை மருத்துவப்படிப்பில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தவறான அணுகுமுறையாகும்்" என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மகாராஷ்டிர அரசு பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் முறையிட்டனர். இம்மனுவை நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, எம்.ஆர். ஷா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை மகாராஷ்டிர அரசு பின்பற்றவில்லை. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டும். இந்த நடைமுறையை வரும் 14-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பொதுவாக கல்வி நடைமுறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த கல்வி நடைமுறையையும் மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment