டாஸ்மாக் கடை பணியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் ஆவதற்கான சிறப்பு தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்கிறது

டாஸ்மாக் கடை பணியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் ஆவதற்கான சிறப்பு தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் என்று விரிவாக தெரிவிக்க வேண்டும் என்றும், எந்த கல்வி தகுதியின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கேட்டு இருந்தனர். இந்த நிலையில் தேர்வு தொடர்பான பாடத்திட்டங்கள் அடங்கிய விரிவான தகவல்கள் டாஸ்மாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்ட மேலாளர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் சிறப்பு தேர்வுக்கான பாடத்திட்ட விவரத்தினை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள்) தெரிவிப்பதுடன் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் 8-ந்தேதி இதுதொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். இந்த சிறப்பு தேர்வு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம், ஹால் டிக்கெட் ஆகியவை தனியாக அனுப்பப்படும். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment