ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

'புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை' என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. அத்துடன் புதுச்சேரி அமைச்சரவை ஜூலை 7-ம் தேதி மேற்கொள்ளும் முடிவுகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண் டுகளாக மோதல் போக்கு நீடிக்கி றது. இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக் கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை. இது தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி 2017-ல் மத்திய அரசு பிறப்பித்த 2 உத்தரவுகளும் ரத்தா கின்றன' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சட்டப் பேரவையை தாண்டிய உயர்ந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. தேர்தலின்போது இதை அவசர வழக்காக எடுக்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. பிரதிவாதியாக முதல்வர் இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் நிதி நிலை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆளுநரின் முடிவு இல்லாமல் அதை நடை முறைப்படுத்தக் கூடாது' என கிரண்பேடி வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர், புதுச்சேரி அமைச்சரவை கூடி ஜூன் 7-ம் தேதி மேற்கொள்ள உள்ள முடிவு களை அமல்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேசமயம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக் குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். இவ்வழக்கில் புதுச்சேரி முதல்வர் பதில் மனுத் தாக்கல் செய்யவும், பிரதிவாதியாக சேரவும் நோட்டீஸ் அனுப்பினர். முதல்வர் நாராயணசாமி கருத்து உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும் போது, ‘‘துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அறையில் கூட்டம் நடத்துவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, நேரில் ஆய்வு செய்து முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் உத்தரவிடுவது போன்ற செயல்களை செய்வ தற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு ஜனநாய கத்தை நிலைநாட்டியுள்ளது'' என்று கூறியிருக்கிறார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment