சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறியோருக்கு பொறியியல் சேர்க்கையில் மீண்டும் வாய்ப்பு 

தமிழக பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் படிப்பு சேர்க்கை தொடர்பான சான்றிதழ் சரி பார்ப்புப் பணி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணிகள், வரும் 12-ம் தேதி வரை தமிழகம் முழுக்க உள்ள 46 சேவை மையங்களில் தொடர்ந்து மேற் கொள்ளப்படும். சரிபார்ப்பு பணி தொடங்கிய முதல் நாளான 7-ம் தேதி பங்கேற்க தமிழகம் முழுக்க 23,004 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இவர் களில், 4,248 பேர் பங்கேற்க வில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பலருக்கும் குறுஞ்செய்தி மூலம் அல்லது இ-மெயில் மூலம் தகவல் சென்று சேரவில்லை என தெரிய வந்தது. பல மாணவ, மாணவியர் தனியார் பிரவுசிங் மையங்களில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப் பித்தபோது, மாணவர்களின் எண் ணுக்கு பதிலாக அந்த மையத்தின் எண் மற்றும் இ-மெயில் முகவரியை சில இடங்களில் இணைத்துள்ளனர். இதனால்தான் சிலருக்கு தகவல் கிடைக்காமல்போனது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங் கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கும், 044-22351014, 22351015 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவ, மாணவியர் விவரம் அளித் தால் அவர்களுக்கு மீண்டும் சரி பார்ப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, ஆன்லைனில் விண் ணப்பிக்கும்போது, தவறுதலாக வேறு மாவட்ட மையங்களை தேர்வு செய்திருந்தாலும், சொந்த மாவட்ட சரிபார்ப்பு மையத்தில் வரும் 12-ம் தேதி வரை பங்கேற்கவும் இந்த தொலைபேசி எண்கள் மூலம் வழிகாட்டுதலை பெற்று பயனடையலாம். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment