‘வாயு’ புயல் வலுவிழந்த பிறகே தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு

அரபிக் கடலில் நிலவும் ‘வாயு' புயல் வலுவிழந்த பிறகே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி ஒரு வாரம் ஆகியும் குறிப்பிடும்படியான மழை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது: அரபிக் கடலில் ‘வாயு' புயல் உருவானதிலிருந்து, தென்மேற்கு பருவக்காற்று தமிழகம் நோக்கி வீசுவது குறைந்துள்ளது. அத னால் முந்தைய ஆண்டுகளில், இதே காலகட்டத்தில் பெய்த மழை, இந்த ஆண்டு தமிழகத்தில் பெய்யவில்லை. கேரளாவி லும் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்த புயல் வலுவிழந்த பிறகே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள் ளது. அது குறித்த விவரங்கள் சில தினங்களில் தெரியவரும். தற்போதைக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைவுதான். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை யில் 2 செமீ, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் 111 டிகிரி நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி, சென்னை விமான நிலையம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி, மதுரை தெற்கு, காரைக்கால், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, தூத்துக்குடியில் 102 டிகிரி, சேலம், கரூர் பரமத்தியில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு ந.புவியரசன் கூறினார்.

No comments:

Post a Comment