‘டெட்’ தேர்வு ஹால்டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் சான்றொப்பம் பெற வேண்டும்

ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. ்அன்றைய தினம் முதல் தாள் தேர்வு 9-ம் தேதி 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளன. இதற்கான ஹால்டிக்கெட்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டது. இதற்கிடையே ஹால்டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா வெளி யிட்ட செய்திக்குறிப்பு: புகைப் படம் இல்லாதவர்கள் ஹால்டிக் கெட்டில் புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். கூடுதலாக ஒரு புகைப்படத்தை தேர்வுக்கூட கண் காணிப்பாளரிடம் ஒப்படைத்து பதிவேட்டில் கையெழுத்திடு வதுடன் ஆதார், ரேஷன் கார்டு உட்பட தமது புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment