நாடுமுழுவதும் டாக்டர்கள் நாளை வேலைநிறுத்தம்  தமிழகத்தில் அரசு டாக்டர்கள் பங்கேற்கவில்லை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு

கொல்கத்தா டாக்டர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கம் மாநில தலை நகரான கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நோயாளி ஒருவர் உயிரிழந் தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்கள் மீது தாக்கு தல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த 2 டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, அம் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இந்திய மருத் துவ சங்கத்தின் அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.

தமிழகம் முழுவதும் இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா, ஆர்ப்பாட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது போன்ற போராட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற் கிடையில் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு ஆதரவாக 17-ம் தேதி (நாளை) நாடுமுழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத் துவ சங்கத்தின் தமிழகத் தலைவர் எஸ்.கனகசபாபதி கூறியதாவது:

மேற்கு வங்கம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக் டர்களை தரக்குறைவாகப் பேசிய, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். டாக் டர்களைத் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், மருத் துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என் பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் வரும் 17-ம் தேதி காலை 6 மணி முதல் 18-ம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் வேலை நிறுத்தம் நடைபெற உள் ளது. இதில் 6 லட்சம் டாக்டர் கள் ஈடுபட உள்ளனர். தமிழகத் தில் அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் பணியாற்றும் 1.20 லட்சம் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரிய மருத்துவ மனைகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளில் மட்டும் டாக்டர்கள் பணியாற்றுவார் கள். மற்ற எந்தப் பணியிலும் டாக்டர்கள் ஈடுபட மாட்டார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தப் போராட் டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிசங்கர், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.பால கிருஷ்ணன், அரசு டாக்டர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோ ரிடம் கேட்டபோது, “இந்திய மருத்துவ சங்கம் நாடுமுழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தனி யார் மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு வார்கள். ஆனால், அரசு டாக்டர் கள் ஏழை நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். அதற்குப் பதிலாக டாக்டர்களும் மருத்துவ மாணவர் களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவோம். மேலும் போராட் டத்துக்கு ஆதரவாக மருத்துவ மனை வளாகத்தில் கூட்டங்கள் நடத்தப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment