அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் பட்டியல்.

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்களை சேர்ந்து படிக்க அறிவுறுத்தி உள்ளது. அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் பட்டியலையும் அது வெளியிட்டு உள்ளது. இந்தியா முழுவதும் ஆக்சிலரி நர்சிங் மிட்வைபரி சான்றிதழ் படிப்பு, ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு, பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு ஆகிய பெயர்களில் மட்டுமே நர்சிங் சார்ந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படுகிறது. இதர பெயர்களில் மருத்துவ மனைகள் மற்றும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என எச்சரித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் நர்சிங் படிப்புகள் பற்றிய விவரங்களை www.tamilnadunursingcouncil.com/recognised_institutions.php என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment