தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரிய வழக்கு வெளி மாநிலத்தவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உதவிப் பொறியாளராக தேர்வான வெளி மாநிலத்தவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பூரைச் சேர்ந்த சக்கர வர்த்தி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள உதவி மின் பொறியாளர் பணி யிடத்தை நிரப்புவது தொடர்பாக 14.2.2018-ல் அறிவிப்பாணை வெளி யானது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் உதவி மின் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்வு முறையில் இட ஒதுக்கீடுக் கொள்கை முழுமை யாகப் பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீடுப் பிரிவினர் பலர் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இப்பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. ஏற்கெனவே இது தொடர்பாக பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இருப்பினும் எங்கள் கோரிக்கையை நிராகரித்து மின் வாரிய உதவிப் பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோ ரின் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலை ரத்து செய்து, இடஒதுக்கீடுக் கொள்கை யைப் பின்பற்றி புதிய பட்டியல் தயாரிக்கவும், அதுவரை தற்போது வெளியிடப்பட்ட உதவிப் பொறி யாளர் தேர்வுப் பட்டியல் அடிப் படையில் நியமனம் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ண குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இட ஒதுக்கீடுக் கொள்கையைப் பின் பற்றாததோடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்’’ என்றார். இதையடுத்து, மின்வாரிய உதவிப் பொறியாளராக தேர்வாகி உள்ள வெளி மாநிலத்தவர்களுக் கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மின் வாரியத் தலைமைப் பொறி யாளர் 2 வாரங்களில் பதில ளிக்க வேண்டும், பணி நியமனம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக் குக் கட்டுப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment