எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப் பது நேற்று தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் 23 அரசு மருத்து வக் கல்லூரிகளில் 3,250 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 506 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,744 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசுக்கு உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக் காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி (ஐஆர்டி) இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட் டில் செயல்பட உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 30 இடங் கள் தொழிலாளர்களின் வாரிசுக ளுக்கும் ஒதுக்கப்படுகிறது. மீத முள்ள 55 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல், சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. மேலும் தனியார் கல் லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட் டுக்கு சுமார் 2 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண் ணப்ப விநியோகம் அரசு மருத்து வக் கல்லூரிகளில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 7-ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதில் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின் றனர். முதல் நாளான நேற்று 12,584 பேர் ஆன்லைனில் விண் ணப்பித்துள்ளனர். வரும் 20-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்து தகுந்த ஆவ ணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரியில் வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப் பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களில் அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று விண் ணப்பிக்கலாம். இ-சேவை மையங் களிலும் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களையும் மேலே கூறப்பட்டுள்ள இணைய தளங்களில் தெரிந்துகொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு 044-28361674, 29862045, 28360675, 28360674, 28364884 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெறலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப் படுகிறது. முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ்2 மதிப்பெண் கணக் கில் எடுத்துக் கொள்ளப்படாது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு 1,38,997 பேர் விண்ணப் பித்திருந்தனர். இதில், தேர்வு எழுதிய 1,23,078 பேரில் 59,785 பேர் (48.57%) தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment