டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டணம் ரத்தாகிறது ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கையை வெளி யிடுகிறது. இதில் வட்டி குறைப்பு அல்லது அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்பு கள் இடம்பெறும். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் நிதிக் கொள்கையை வெளியிட்டார். அப்போது வங்கிகளில் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத் தினார். ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் சிஸ்டம் (ஆர்டிஜிஎஸ்) முறையின் கீழ், ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு இணையதளம் வழியாக அனுப்ப முடியும். இதேபோல ரூ.2 லட்சத்துக்குட்பட்ட தொகையை நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (நெஃப்ட்) முறையின் கீழ் அனுப்பலாம். இப்போது பாரத ஸ்டேட் வங்கி நெஃப்ட் மூலம் செய்யப் படும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கிறது. அதேபோல ஆர்டிஜிஎஸ் கட்டணம் ரூ.5 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி மிகக் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கிறது. இதைத் தொடர்ந்தே வங்கிகளும் வாடிக்கையாளரிடமிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்த னையை அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி இந்தக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இந்த கட்டணக் குறைப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண் டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை நேரமும் நீட்டிக்கப்பட் டுள்ளது. இதன்படி, மாலை 4.30 மணி வரை மட்டுமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்று இருந்த நிலையில் இப்போது மாலை 6 மணி வரை மேற்கொள்ள முடியும். ஏடிஎம் கட்டணங்கள் தானியங்கி பணப் பட்டுவாடா இயந் திரங்கள் (ஏடிஎம்) மூலம் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப் பாக, ஒரு வங்கியின் வாடிக்கையாளர் கள் பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்து வதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் குழு தனது பரிந்துரையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்யும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்கள் விவரம் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a Comment