விடைத்தாள் திருத்த மோசடி சமூகத்துக்கு எதிரான குற்றம் உயர் நீதிமன்றம் கருத்து

விடைத்தாள் திருத்தத்தில் மோசடி செய்வது சமூகத்துக்கு எதிரான குற்றம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனத் தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடப்பதாகவும், பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி பி.நிர்மலாதேவி உட்பட 10 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது விடைத்தாள் திருத்தம் நியாயமாக நடக்கும், உரிய மதிப் பெண் கிடைக்கும் என நம்பிக்கை யில் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், விடைத்தாள் திருத்தத் தில் மோசடி செய்வது, தவறாக மதிப்பெண் வழங்குவது சமூகத் துக்கு எதிரான குற்றமாகும். இந்த தவறு வழக்கமாகிவிட்டது. இரட்டை எச்சரிக்கை தேவை பல்வேறு பல்கலைக்கழகங் கள், நிறுவனங்களில் இக்குற்றச் சாட்டுகள் வருகின்றன. இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத் தம், தேர்வு முடிவுகள் வெளியிடு வதில் மாநில அரசும், கல்வித் துறையும் இரட்டை எச்சரிக்கை யுடன் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமை யானவை. இதனால் மனுதாரர் கள் மீதான குற்றச்சாட்டு குறிப் பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச் சாட்டு குறிப்பாணைக்கு பதிலளிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரை வில் மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment