உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, June 8, 2019

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கம்  தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம்

தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கப்பட்டதற்கு தமிழாசிரி யர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக் கல்வியில் 14 ஆண்டு களுக்குப்பின் பாடத்திட்டத்தை மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க அப்போதைய பள்ளிக் கல்வித் துறை செயல ராக இருந்த உதயசந்திரன் வழி காட்டுதலின்படி அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் உட்பட 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உழைப்பில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய் யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்பு களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதிலும் காவி நிறத்தில் பாரதியார் படம் இடம்பெற்றது உட்பட சில சர்ச்சைகளும் எழுந் தன. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங் களில் இறை வாழ்த்து நீக்கப் பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பி யுள்ளன.

இதுகுறித்து தமிழாசிரியர் ஜெய்னுலாபிதீன் கூறும்போது, ‘‘முந்தைய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் தொடக்கமாக இறை வாழ்த்து இடம்பெற்றிருக்கும். அதன்பின் நாட்டுப்பண் மற்றும் மொழி வாழ்த்து இருக்கும். ஆனால், புதிய தமிழ் பாடத்திட்டத்தில் இறை வாழ்த்து நீக்கப்பட்டுள்ளது. மொழி வாழ்த்து மட்டுமே உள்ளது. பாடத்திட்டக்குழு இதை நீக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனெனில், இறை வாழ்த்து தனிப் பட்ட எந்த மதத்தையும் போற்ற வில்லை. அவையெல்லாம் மாண வர்களிடம் நற்பண்புகளை வளர்க் கும் கருத்துகளைத்தான் முன் வைத்தன. எனவே, தமிழ் புத்தகங் களில் மீண்டும் இறை வாழ்த்து சேர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.

எழுத்தாளர் ஆதலையூர் சூரிய குமார் கூறும்போது, ‘‘பாடத்திட்டத் தில் இடம்பெற்ற வாழ்த்து பாடல் கள் எல்லாம் பக்தியை தீவிரமாக வலியுறுத்தவில்லை. மனிதம், நம்பிக்கை தரும் வள்ளலார், தாயு மானவர் போன்றோரின் பாடல் களே இடம்பெற்றன. மேலும், நன்னெறி கதைகளில் இருந்து விலகியுள்ள இன்றைய தலை முறை குழந்தைகள் இறை வாழ்த் தின் மூலம் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளலாம்.

பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கையுடன் வாழும் நிலையில், பாடத்திட்டத்தில் ஏதா வது ஒரு வடிவில் இறை வாழ்த்தை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

கல்வியாளரும், பேராசிரியருமான இரா.நிவாசன் கூறும்போது, ‘‘பக்தியிலக்கிய மொழி என கூறு மளவுக்கு எண்ணற்ற பக்தி இலக் கியங்கள் தமிழில் இயற்றப்பட் டுள்ளன. அத்தகைய பாரம்பரிய மான தமிழ் மொழிப்பாடத்தில் கடவுள் வாழ்த்தை நீக்குவது ஏற்கமுடியாது. குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தினால் அதை நீக்கலாம். அதேநேரம் அனைத்து மதக்கடவுள்களையும் போற்றும் விதமாக பொதுப்படையில் இருக் கும் இறை வாழ்த்துகளை புத்த கத்தில் வைக்கலாம்.

கேரளாவில் இறை மறுப்பு கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தாலும் ‘கடவுளின் தேசம்’ என்ற வாசகத்தை அவர்கள் நீக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் சின்னமாக கோயில் கோபுரத்தை வைத்துக் கொண்டு இறை வாழ்த்தை நீக்கியது கண்டிக் கத்தக்கது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’என்றார்.

பாடத்திட்டக்குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் சிலர் இதுபற்றி கூறும்போது, ‘‘மாணவர்களிடம் கடவுள் நம்பிக்கையை திட்ட மிட்டு திணிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இறை வாழ்த்தும், எந்த மதத்தின் கடவுளையும் நேரடி யாக குறிக்கும் சொற்களும் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மற்றபடி இதில் வேறு உள்நோக்கம் இல்லை.

அதேநேரம் தேவாரம், திருவாச கம் உட்பட தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களின் சிறந்த கருத்துகள், வரலாறு, மொழிச் சிறப்பு, அறிவியல் கூற்றுகள் எல்லாம் விரிவாக குறிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இதுதவிர அனைத்து மதத்தை சேர்ந்த புல வர்களின் பாடல்கள், புது கவிதை கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளன’’என்றனர்.

பாடத்திட்ட உயர்மட்டக் குழுவில் இடம்பெற்ற ஒருவர் கூறும் போது, ‘‘கேரளாவை பின்பற்றி அனைத்து பாடங்களும் 10 வித மான மையக்கருத்துகளை முன் வைத்து தயாரிக்கப்பட்டன. அதன்படி தமிழ் பாடத்திட்டமும் மொழி, இயற்கை, நீர் மேலாண்மை உள்ளிட்ட கருத்துகளை முதன்மை யாக கொண்டு தயாரிக்கப்பட்டது.

அதன்படி தொன்மை மொழி யான தமிழ் புத்தகத்தில் மொழி அடிப் படையில் பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாடல்கள் மொழி வாழ்த்தாக முதலில் வைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு இறை வாழ்த்து நீக்கப்படவில்லை.

கம்ப ராமாயணம், பெரிய புராணம் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ புலவர்களின் இறை இலக்கியங்களும் அதற்கடுத்த பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. அதன் வகைப்பாடு மட்டுமே இடம் மாறியுள்ளது.

பழங்காலத்திலும் இப்போதைய காலகட்டத்திலும் இருக்கும் சூழல் வேறுபாடுகளை ஒப்பிட்டு விளக் கும் வகையில் பாடத்திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதுதான் மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும்.

மேலும், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை பல்வேறு கல்வியாளர்கள், நிபுணர்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. மக்களின் பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்கள் தெரிவித்த கருத்துகளின்படியும் பல மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன. அனை வரும் ஏற்றதற்கு பின்னரே பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப் பட்ட புத்தகங்களிலும் இதே நடை முறையே இருந்தது. எனவே, காலத்துக்கேற்ப பல்வேறு சிறப்புமிக்க மாற்றங்களுடன் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.பழங்காலத்திலும் இப்போதைய காலகட்டத்திலும் இருக்கும் சூழல் வேறுபாடுகளை ஒப்பிட்டு விளக்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான் மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment