அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்பு தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி., யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தற்போது நடுநிலைப் பள்ளி களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்பு களை, தொடக்கப் பள்ளியிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8 வரை உள்ள பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். ஆசிரி யர் தகுதித் தேர்வுக்கு ஆன்லை னில் விண்ணப்பம் பெறப்படு கிறது. இனி ஆன்லைன் மூலம், தேர்வுகள் எழுதும் முறை கொண்டுவரப்பட உள்ளது. வரும் காலங்களில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அளவுக்கு தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment