புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தம் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் தகவல்

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றதும் புதி தாக தேசிய கல்விக் கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிர மணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2016-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரை களை வரையறுத்து வரைவு அறிக் கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சி களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வேறு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற் காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017-ம் ஆண்டு மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வினர் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் வரைவு அறிக்கை தயாரித்தனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக பாஜக அரசு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த 31-ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரி யால் நிஷாங்கிடம் சமர்ப்பித்தது. அதில், பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந் தது. பள்ளிகளில் 3 மொழிக் கொள் கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற பிற மாநில மொழிகளை யும் படிக்க வேண்டும் என வரைவு அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்டிருந்தது. இதுகுறித்து கல்வி யாளர்கள், மாணவர்கள், பெற் றோர், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரி வித்தனர். இந்தியை திணிக்க முயன் றால் மீண்டும் மொழிப் போராட்டம் தீவிரமாகும் என எதிர்க்கட்சிகள் அறி வித்தன. ‘தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது’ என துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உறுதிபட தெரிவித்தனர். கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந் துரைகளுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்த நிலையில், ‘எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரி யால் நிஷாங் தெரிவித்தார். ‘எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. மக்களின் கருத்து களை கேட்டறிந்த பிறகே, வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்’ என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பிரகாஷ் ஜவடேகர், ஜெய் சங்கர் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ‘புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து அவசரப்பட்டு முடிவு எடுக் கக் கூடாது. இதுகுறித்து பொது மக்கள் நன்கு அலசி ஆராய வேண் டும். ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்’ என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தமிழகத்தைப் போன்று கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மேற்குவங்கத் திலும் இந்திக்கு எதிராக கடுமை யான ஆட்சேப குரல்கள் எழுந்தன. இதையடுத்து, கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் நேற்று வெளி யிடப்பட்டது. அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட் டுள்ளது. விருப்பத்தின் அடிப்படை யில் 3-வது மொழியை மாணவர் களே தேர்வு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தி பேசாத மாநிலங் களில் உள்ள மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற நிலை மாறி, வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் அம லில் உள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உள்ளவாறு மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுமா, 3-வதாக ஒரு மொழியை கற்பது கட்டாயமாகுமா என்பது குறித்து இனிமேல்தான் அரசு தெரிவிக்கும். இந்நிலையில், வரைவு அறிக் கையை உடனடியாக எப்படி திருத்த முடியும். இது ஒரு ஏமாற்று வேலை. முதலில் ஏதாவது ஒரு 3-வது மொழி என்று சொல்லிவிட்டு, சில நாட்களுக் குப் பிறகு மீண்டும் இந்தியை கொண்டுவர முயற்சி செய்வார்கள் என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment