புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம்

புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்களுக்கு போக்கு வரத்து ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 70 வட் டாரப் போக்குவரத்து அலுவலகங் கள் (ஆர்டீஓ), 60-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக 3,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். 6,210 பேர் புதிய வாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங் களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உள்ளிட்ட இதர வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு நடக்கின்றன. ஆர்டீஓ மற்றும் பகுதி அலுவல கங்களில் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப் பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் ‘சாரதி’ (பெயர்ப்பு-4) மென்பொருள் வாயி லாக விண்ணப்பிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் பெற https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, உரிய தொகையை ஆன்லைனில் செலுத் தும் வசதி உள்ளது. இந்நிலையில், பொதுமக்க ளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கு வதில் தாமதம் செய்யக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது: ஆர்டீஓ அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பல் வேறு ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்து வருகிறது. குறிப் பாக, ஓட்டுநர் உரிமம் பெற அலுவல கங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. விண்ணப்பிப் பவர்கள் தங்கள் வசதிக்கேற்ற நாள், நேரத்தை குறிப்பிட வேண் டும். அந்த நேரத்தில் அவர்கள் வரும் போது ஓட்டுநர் உரிமம் வழங்கு வதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆர்டீஓ அலுவலகங் களும் கணினிமயம் ஆக்கப்பட் டுள்ளதால், ஓட்டுநர் உரிமம் மற் றும் தனிப்பட்ட வாகனங்கள் தொடர்பான அனைத்து பணி களுக்கும் விண்ணப்பத்துடன் இனி தடையில்லா சான்று இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையதளத்தில் விண்ணப் பிக்கும்போது அனைத்து விண்ணப் பங்களிலும் செல்போன் எண், ஆதார் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை தவறாமல் குறிப் பிட வேண்டும். இதன்மூலம் அவர் களுக்கு விரைவாக தகவல் அனுப்ப வும், சிறந்த முறையில் சேவை அளிக் கவும் முடியும். ஓட்டுநர் உரிமம் பெற புகைப்படம் எடுக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment