சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி, கையுறை அடங்கிய சுகாதார பேழைகள் விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை

சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 43,000-க் கும் மேற்பட்ட சத்துணவு மையங் கள் செயல்பட்டு வருகின்றன. சத்துணவு மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு தக்காளி, லெமன், சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் சத்துணவு பணி யாளர்கள் ஈடுபட்டு வருகின் றனர். ரூ.1.73 கோடி செலவில்... சத்துணவு மைய பணியாளர் களின் சுகாதாரத்தினை கடைப் பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.1.73 கோடி செலவில் சுகாதார பேழைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் அடிப்படையில், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ.400 செலவில் சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதார பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரி விளக்கம் இதுதொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியாளர்களின் சுகாதாரத் தைக் கருத்தில் கொண்டு சுகாதார பேழைகள் வழங்கப் பட்டு வருகின்றன. சத்துணவு சமைக்கும்போதும், பரிமாறும் போதும் கையுறைகள் உள்ளிட்ட வற்றை கட்டாயம் அணிந் திருக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளோம். சுகாதாரம் பேணி காக்கப்படுவதன் மூலம் உணவின் தரம் பாதுகாக்கப்படும் இவ்வாறு சமூக நலத் துறை அதிகாரி தெரிவித்தார்.சத்துணவு சமைக்கும் போதும், பரிமாறும் போதும் கையுறைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment