குழு பரிந்துரை கிடைத்ததும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டுறவுத்துறை ஏற்கனவே 27 பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இது 28-வது விற்பனை நிலையம். இன்னும் 13 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் தரமான அளவு குறையாத பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடைகுறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். இதுதொடர்பான புகார்கள் வந்தால் ஊழியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அங்கு வந்த வடசென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஷ், மாவட்ட செயலாளரான எனக்கு அழைப்பிதழ் வழங்காமல், அமைச்சர்கள் இருவரும் எனது தொகுதிக்கு வந்திருப்பது முறையல்ல எனக்கூறி அமைச்சர் ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவைத்தலைவர் மதுசூதனன் சமாதானம் செய்து வைத்தார்.

2 comments:

 1. Good Read…
  Been search for the informative post on civil services examination is quite difficult. Thanks for sharing the valuable post.

  IAS exam
  IAS Academy
  IAS Coaching Centre in Chennai
  UPSC Coaching in Chennai
  Civil Services Coaching in Chennai
  IAS Academy in Trivandrum

  ReplyDelete
 2. This is really an informative post. It will surely help the students to improve the competitive exam score. The tips you have shared in this post is very useful. Good Stuff! Keep updating more.
  IAS Coaching in Chennai | Civil Service Coaching Centre In Chennai | Civil Service Coaching In Chennai | Best Upsc Coaching In Chennai | UPSC Coaching Centre in Chennai

  ReplyDelete