தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘ஜாக்டோ-ஜியோ’ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில், பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
மு.சுப்பிரமணியன் மீதான தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 3-ந்தேதி(இன்று) மாலை மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment