மெட்ரோ ரயில்,அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம்

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதேபோல டெல்லி அரசு பேருந்திலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார். பள்ளிக்கூடங்களில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் டெல்லி ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பெண்களுக்கு இலவச பயண திட்டத்துக்கு டெல்லி அரசு ஆண்டுக்கு ரூ.1200 கோடி செலவிடும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பெண்களின் இலவச பயணத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment