இனி எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி-பிரிவினருக்குத் தனியார் மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடையாது

உத்தரப்பிரதேச மாநிலத்தில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி - பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு கிடையாது என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "இதுவரையில் சாதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீட்டு முறை, இனி அனைத்து தனியார் பொது மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்(பா.ஜ.க) இத்தகைய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளார். அகிலேஷ் யாதவ் ஆட்சியில் முன் மொழியப்பட்ட இத்திட்டமானது தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையில், பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடியினத்தவர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினர் (OBC) ஆகியோருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு முறை முடிவுக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ள உ.பி யில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ள பல முன்னெடுப்புகள் சிறுபான்மையினர் நலனைப் பாதிக்கும் வகையிலும், பிற்போக்குத் தன்மை வாயிருந்ததாகவும் இருப்பதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. மேலும் உ.பி பள்ளிகளில் கட்டாய யோகா மற்றும் பெண்களுக்கான தற்காப்பு வகுப்புகளும் அறிமுகம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்டாய மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஹிந்தி அல்லாத பிறமாநிலங்களில் ஹிந்தி மூன்றாம் மொழியாக அறிவிக்கவிருக்கும் நிலையில் உ.பி பள்ளிகளில் கட்டாயம் அயல் மொழிகள் ஒன்று அறிமுகம் செய்யவிருக்கிறது. இத்துடன் தேசியவாதம், தேசப்பற்று மற்றும் கலாச்சார வகுப்புகளும் கொண்ட புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

No comments:

Post a Comment