வேளாண்மை பல்கலையில் முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

இதன்படி வேளாண்மை பொருளியல், பூச்சியியல், வேளாண்மை விரிவாக்கம் மற்றும் தொடர்பியல், நுண்ணுயிரியல், உழவியல், நூற்புழுவியல், தாவர நோயியல், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி தகவலியல், உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழுவியல், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வனவியல் உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் 2019-20-ம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்பு, பிஹெச்.டி. ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு இன்று (ஜூன் 3) முதல் ஜூலை 15-ம் தேதி வரை http://www.tnau.ac.in/pgadmission.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 23-ம் தேதியும், பிஹெச்.டி. ஆராய்ச்சி படிப்புக்கு ஜூலை 30-ம் தேதியும் கோவையில் நுழைவுத்தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 16-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். விவரங்களுக்கு 0422-6611261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment