ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த மாத இறுதிக்குள் வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும் கருவூல கணக்கு துறை உத்தரவு

கருவூல கணக்குத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இந்த ஆண்டிற்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு தற்போதும் அனைத்து மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. எனவே, இதுநாள் வரை நேர்காணலுக்கு வராதவர்கள், வாழ்வு சான்றினை சமர்ப்பிக்காதவர்கள் நேரில் சென்றோ அல்லது ‘ஜீவன் பிரமான்’ என்ற இணையதள வழி சேவை( www.jeevanpramaan.gov.in ) மூலமாகவோ தங்களது வாழ்வு சான்றினை இந்த மாதத்திற்குள் (ஜூன்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment