அரசு ஊழியர்கள் ஊழல்  பணிப் பதிவேட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

அரசுத் துறைகள், வங்கிகளில் ஊழலை ஒழிக்கவும் திறமை யின்மையைக் களையவும் ஊழி யர்களின் பணித்திறன், பணியாளர் பணி பதிவேட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் 12 பேர் சமீபத் தில் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டனர். அரசு சேவை, பொதுவாழ் வில் ஊழலை ஒழிக்க பொதுநலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அரசுத் துறைகளில் இந்நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் பணியாளர் அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ‘‘அனைத்து துறைகளின் செயலாளர்களும் தங் கள் துறையில் பணியாற்றும் ஊழி யர்களின் பணித்திறன், பணியாளர் பணிப் பதிவேடு ஆகியவற்றை சட்டத்துக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய வேண்டும். ஒரு ஊழியரின் பணி சரியி்ல்லை என்றால் அவரை ஓய்வு பெற உத்தரவிடும்போது அந்த உத்தரவு தன்னிச்சையாகவோ, வேறு காரணங்களாலோ பிறப்பிக் கப்படவில்லை என்பதையும் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும். ஊழியரின் பணிப் பதி வேடு, பணிக்காலம், பணித்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து அது பற்றிய அறிக்கையை வரும் ஜூலை 15-ம் தேதி முதல் ஒவ்வொரு மாத மும் 15-ம் தேதி அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். எல்லா அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் இதைப் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘1972-ம் ஆண்டின் மத்திய அரசு ஊழியர் விதிகள், பணியாளர் அமைச்சகத்தின் வழிகாட்டு விதி கள் ஆகியவற்றின் கீழ்தான் பணி யாளர் பணிப் பதிவேடு ஆய்வு செய்யப்படும். ஊழியரின் நேர்மை யில் சந்தேகம் ஏற்பட்டாலோ, பணியில் திறமையின்மை இருந்தாலோ பொதுநலன் கருதி அரசு ஊழியருக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்க இந்த விதிகள் அரசுக்கு அனுமதி அளிக்கின்றன’’ என்றார்.

No comments:

Post a Comment