நிறுவன இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த அரசு திட்டம்

இந்தியாவில் உள்ள நிறுவனங் களின் செயல்பாடுகளை தூய்மைப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள் ளது. நிறுவனங்களில் நிகழும் முறை கேடுகள், ஊழல் குற்றச்சாட்டு களைத் தவிர்க்க, நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிறுவன விவகாரங்கள் துறைச் செயலர் இஞ்செட்டி னிவாஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் இயக்குநர் குழு வில் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக்குநர்களை நியமிப்பதற்கு முன்பு அவர்களுக்கு தேர்வு நடத்தி அதன் பிறகே அவர்களை நியமிப் பது என்று முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். நிறுவன இயக்குநர் குழுவில் எவ்வித பொறுப்புகளும் இல்லாத இயக்குநர்களுக்கு எவ்வித தொடர் பும் இருக்காது என்ற நிலையை முற்றிலுமாக தகர்க்க வேண்டும். நிறுவன பொறுப்புகள் குறித்து குறைந்தபட்சம் அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் களுக்குரிய பொறுப்புகள், கடமை கள், நிறுவனத்தில் அவர்களுக் குள்ள பணிகள் ஆகியவற்றை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். நிறுவன இயக்குநர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப் படும். இதில் அடிப்படை நிறுவன விதிகள், பின்பற்ற வேண்டிய நன் னெறிகள், பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். இயக்குநர்கள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்தத் தேர்வை எத்தனை தடவை வேண்டு மானாலும் எழுதலாம் என்றும் அவர் கூறினார். நிறுவன இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ள அனுபவம் மிக்க இயக்குநர்களுக்கு தேர்வு எழுது வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் புதிதாக இயக்குநராக பொறுப் பேற்போர் குறிப்பிட்ட காலத்துக் குள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி செய்திருக்க வேண்டும் என்றார். பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் எவ்வித பொறுப்புகளும் இல்லாத இயக்குநர்கள் இடம்பெற வேண்டும். மொத்தமுள்ள இயக்கு நர்களின் எண்ணிக்கையில் மூன் றில் ஒரு பங்கு பேர் இடம்பெற வேண்டும். நிறுவனத்தின் உள் விவகாரங்களில் எவ்வித தொடர்பும் இல்லாதவராக வெளியிலிருந்து அவர்களது கணிப்பின்படி நிறு வனம் எப்படி செயலாற்றுகிறது என்பதை உறுதி செய்வதற்காக இவ்விதம் இயக்குநர்கள் நியமிக் கப்படுகின்றனர். நிறுவனத்தில் முத லீடு செய்துள்ள சிறிய முதலீட் டாளர்களின் நலனை காப்பதுதான் இவர்களின் முக்கிய பணியாகும் என்று இஞ்செட்சி னிவாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment