உடற்கல்வியியல் படிப்புகளில் சேர ஆசையா?

விளையாட்டு மற்றும் உடற்கல்வி சார்ந்த துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சிறந்த அடித்தளம் அமைத்துத் தருகிறது. சென்னையை அடுத்த வண்டலூர் மேலக்கோட்டையூரில் இந்த பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் மாநில அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புமிக இந்த கல்லூரியில் பி.பிஎட். (இளநிலை உடற்கல்வியியல்), எம்.பி.எட். (முதுநிலை உடற்கல்வியியல்) படிப்புகள் மட்டுமல்லாது பி.எஸ்சி. எக்சர்சைஸ் பிசியாலஜி அண்ட் நியூட்ரிசியன், பி.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் கோச்சிங் போன்ற இளநிலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கு பிளஸ்-2 படிப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ‘லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ்’ எனும் ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேரலாம். பி.எஸ்சி. (ஹான்ஸ்) ஸ்போர்ட்ஸ் கோச்சிங் எனும் 4 ஆண்டு படிப்பில் பிளஸ்-2 படித்தவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் 2 முறை பங்கேற்றவர்கள், பதக்கம் பெற்றவர்கள் சேர தகுதியானவர்கள். இது தவிர முதுநிலையில் ஸ்போர்ட்ஸ் கோச்சிங், ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், சோசியாலஜி, யோகா, யோகா தெரபி, எம்.எஸ்சி. எக்சர்சைஸ் பிசியாலஜி அண்ட் நியூட்ரிசியன் போன்ற 2 ஆண்டு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பட்டதாரிகள், இதில் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்புகளுக்கான 2019-20-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. இணைய தளம் வழியாக இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந்தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.tnpesu.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment