புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியீடு நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க பரிந்துரை

கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்தி இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் இப்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, 1986-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின் இதுவரை கல்விக் கொள்கை யில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. 2014-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தலின்போது புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக் கப்படும் என பாஜக தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கல்விக் கொள் கைக்கான பரிந்துரைகளை வழங்க மத்திய அரசின் முன்னாள் செய லர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலை மையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு 2016-ம் ஆண்டு மத்திய அரசிடம் வரைவு அறிக் கையை சமர்ப்பித்தது. அதில், உயர்கல்விக்கு தனி ஆணையம் அமைப்பது, தனியார் நிறுவனங் களை கல்வித்துறையில் அதிகமாக ஈடுபடுத்துவது உட்பட பல மாற் றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர் கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு கள் எழுந்தன.

இதையடுத்து புதிய கல்விக் கொள்கையை தயாரிக்க இஸ்ரோ வின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட மற்றொரு குழுவை 2017-ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக் கையை இறுதி செய்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. மொத்தம் 484 பக் கங்கள் அடங்கிய இந்த அறிக்கை, மனிதவளத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mhrd.gov.in) நேற்று வெளியானது.

அதில் பள்ளிக்கல்வியை முன் தொடக்கக் கல்வி (எல்கேஜி முதல் 2-ம் வகுப்பு வரை), தொடக்கக் கல்வி (3-5), நடுநிலைக் கல்வி (6-8), மேல்நிலைக் கல்வி (9-12) என 4 பிரிவுகளாக பிரிக்க வேண்டும். கல்லூரிகள் போல 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் 8 பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். பாடச்சுமையை குறைப்பதுடன், மழலையர் கல் விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும், எல்லா மாநிலங் களிலும் மும்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய கல்விக் கொள்கை வரைவில், ‘‘நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச் சாரத்தை மாணவர்கள் அறிய மும்மொழி கொள்கை கட்டாயமாக் கப்பட வேண்டும். மும்மொழிக் கல்வி என்பது தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறு இந்திய மொழியாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 6-ம் வகுப்பில் மாணவர்கள் தாங்கள் கற்கும் 3 மொழிகளில் ஒன்றை மாற்றிக் கொள்ளலாம். மாநிலத்தின் தாய் மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும். இந் தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது இந்திய மொழியை கற்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் மொழி, இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயில வேண்டும்.

இந்தி பேசும் மாநிலங்களில் 3-வது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நடு நிலைப் பள்ளியில் வேறு மொழியை தேர்வு செய்பவர்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் முன் 3 மொழிகளிலும் (ஒரு மொழியை இலக்கியளவில்) தங்க ளுக்கு இருக்கும் திறமையை எதிர் பார்க்கும் அளவுக்கு வாரியத்தேர் வில் நிரூபிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள இதர அம்சங்கள் வருமாறு:

பல்கலைக்கழக மானியக்குழு போன்ற கல்வித்துறை சார்ந்த உயர் அமைப்புகளை கலைத்து விட்டு தேசிய கல்வி ஆணையம் அமைத்தல், வானியல், தத்துவம், சமூகம், யோகா, நீர் மேலாண்மை, அரசியல், இசை, உளவியல் ஆகிய வற்றையும் பாடமாக்குதல் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள் ளன.

ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சியும், 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வும் வைத்து அதன்படி ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல், நமது நாட்டின் பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கும், மொழி வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றிய சமஸ்கிருத மொழியை மாணவர் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குதல், மனிதவள மேம்பாட்டுத்துறை பெயரை மீண்டும் கல்வி அமைச்சக மாக மாற்றுதல் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண உயர்வை மாநில பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும். கல்லூரி கள் போல ஒரு பாடத்தில் தேர்வெழுதிய பின் மீண்டும் மறுதேர்வு எழுத வாய்ப்பு, விருப்பப் பாடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குதல், ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருதல், தேசிய மொழிபெயர்ப்பு பல்கலைக்கழகம் அமைத்தல் போன்ற பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30-ம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது இரு மொழிக் கல்விக் கொள்கையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு மாநிலம் முழுவதும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் மொழி, இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயில வேண்டும்.

No comments:

Post a Comment