நியூஸிலாந்துடன் இன்று மோதல் மீண்டும் அசத்துமா வங்கதேச அணி?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மாலை நாட்டிங் காமில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆட் டத்தில் நியூஸிலாந்து - வங்கதேச அணிகள் மோதுகின்றன. வில்லியம்சன் தலைமை யிலான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 10 விக்கெட்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் மேட் ஹென்றி, லூக்கி பெர்குசன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி இலங்கை அணியை 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்குள் சுருட்ட உதவியிருந்தனர். இதன் பின்னர் மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ ரன் வேட்டையில் நியூஸிலாந்து அணி 16 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. மஷ்ரஃப் மோர்டசா தலைமை யிலான வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப் பிரிக்க அணியை 21 ரன்கள் வித்தி யாசத்தில் தோற்கடித்து தொடரை அபாரமாக தொடங்கியது. இதனால் மிகுந்த நம்பிக்கை யுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 330 ரன்கள் குவித்து அசத்தியது. மேலும் ரன்களை சிக்கனமாக வழங்கிய சுழற் பந்து வீச்சு, கட்டுக்கோப்பான வேகப்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது வங்கதேச அணி. இந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்ட ரான ஷகிப் அல் ஹசன் 75 ரன்கள் விளாசி பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். இதேபோல் அவருக்கு உறு துணையாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஸ்பிஹூர் ரகிம் 78 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இவர்களி டம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். மேலும் பந்து வீச்சில் எய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தவும் உதவி னார். 32 வயதான ஷகிப் அல் ஹசன் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வேட்டையாடி அந்த அணியை வீழ்த்துவதற்கு பெரிதும் உதவி இருந்தார். அந்த அனுபவம் இன்றைய ஆட்டத்திலும் ஷகிப் அல் ஹச னுக்கு கைகொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அணிகள் விவரம் நியூஸிலாந்து: கேன் வில்லி யம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி. வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முஸ்பிஹூர் ரகிம், மஹ்மதுல்லா ரியாத், ஷகிப் அல் ஹசன், மொகமது மிதுன், சபீர் ரஹ்மான், மொசடக் ஹோசைன், மொகமது சைபுதீன், மெஹிதி ஹசன், ரூபல் ஹோசைன், முஸ்டா பிஸூர் ரஹ்மான், அபு ஜயத்.

No comments:

Post a Comment