இருமொழி கொள்கைதான் அரசின் கொள்கை முடிவு துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டம்

இருமொழிக் கொள்கைதான் அரசின் கொள்கை முடிவு என துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே கருத்தை அமைச்சர் செங்கோட்டையனும் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மத்திய அரசு கொண்டுவந் துள்ள மும்மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர் கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ‘‘அதிமுக மற்றும் ஆட்சியை பொருத்த வரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பலமுறை இது தொடர்பாக பதி லளித்துள்ளார். எங்களுக்கு எப்போதுமே இரு மொழிக் கொள்கைதான். அதிமுக ஆட்சியின் உறுதியான கொள்கை முடிவும் இதுதான்’’ என்றார். கல்வி அமைச்சர் உறுதி முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக கூறுகை யில், ‘‘தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளின்படி பள்ளிகளில் இப்போது இருமொழிக் கல்வி கொள்கையே அமலில் உள்ளது. இந்த இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது. இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment