அங்கீகாரம், அடிப்படை வசதி இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் 

தமிழகம் முழுவதும், முறையான அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத 903 பள்ளி களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத் தில் தமிழக அரசு தெரிவித் துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி யில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை என்றும், போதுமான ஆசிரியர்கள், கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் ரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் முறையான அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் பிறப் பித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திருவள்ளுர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் நோட்டீஸ் பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment