ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை 5 கட்டங்களாக கலந்தாய்வு 19,426 உபரி ஆசிரியர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு  பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு 

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு ஜூலையில் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வின்போது கட்டாய பணிநிரவல் வழங்க பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை யின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்களுக்கான பொதுமாறு தல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் மாநில அளவில் இணைய தளம் வழியாக நடத்தப்படும். இதற் கிடையே மக்களவைத் தேர்தல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் அறிவித்தது.

அந்த அறிவிப்பில், இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை 5 கட்டங் களாக நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 'கலந்தாய்வுக் கான விண்ணப்பங்களை ஜூன் 28-ம் தேதி வரை ஆசிரியர்கள் சமர்ப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே இட மாறுதல் வழங்கப்பட வேண்டும். மேலும், ஒரு பணி தொகுப்பில் 100 காலிப் பணியிடங்கள் இருந் தால் மட்டுமே இடமாறுதல் வழங்கப் படும்' என்பன உள்ளிட்ட விதிமுறை கள் அதில் கூறப்பட்டுள்ளன.

இதையடுத்து பணிமாறுதலுக்கு ஆசிரியர்கள் இணையதளம் வழி யாக ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 19,426 ஆசிரியர் கள் உபரியாக இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வின்போது அவர்களை கட்டாய பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளி கள், நகராட்சிப் பள்ளிகள் மற் றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஆசிரியர்-மாணவர் விகிதப்படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி களில் 2,279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இதேபோல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 17,147 பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரி யர்கள் உபரியாக இருக்கின்றனர்.

அதன்படி, இப்போது கண்டறி யப்பட்டுள்ள உபரி ஆசிரியர்களை காலிப்பணியிடங்கள் மற்றும் கூடு தல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய வேண்டுமென தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதை அரசு நன்கு பரிசீலனை செய்து, அந்தந்த இயக்குநரகங்களின் நடைமுறை களை பின்பற்றி கண்டறியப்பட் டுள்ள உபரி ஆசிரியர்களை பற்றாக் குறை நிலவும் பள்ளிகளில் பணி நிரவல் மூலம் மாறுதல் செய் வதற்கு தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.

இதையடுத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் மாறுதல் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்கள் எண்ணிக்கைக்கு அதிகமாக உபரி ஆசிரியர்கள் இருந்தால் பணிநிரவல் செய்தது போக மீதமுள்ளவர்களை மாவட்டத் துக்கு உள்ள வேறு ஒன்றியத்துக்கு மாறுதல் செய்ய வேண்டும். இதே போல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்கு உள்ளேயே பணி மாறுதல் வழங்க வேண்டும். விதவைகள், ராணுவ வீரர்களின் மனைவி, அறுவை சிகிச்சை செய் துள்ளவர்களுக்கு பணிநிரவலில் முன்னுரிமை அளிக்கலாம் என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றி மாறுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. கடந்தாண்டு மாணவர் சேர்க்கை அடிப்படையில் உபரி ஆசிரியர்களை கணக்கிடுவது ஏற்புடையதல்ல. இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடக் கப் பள்ளிகளில் உபரியாக இருந்த 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களை மழலையர் வகுப்புகளுக்கு இப்போதுதான் மாற்றியுள்ளனர். இந்நிலையில், எதன் அடிப்படை யில் இடைநிலை ஆசிரியர்கள் மட் டும் 2,008 பேர் உபரியாக இருப்ப தாக கணக்கிடப்பட்டுள்ளது என் பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர, ஆசிரியர் பொதுமாறு தல் கலந்தாய்வில் பணிநிரவல் முதலில் நடைபெற்றால் மாவட்ட மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடை பெறாது. எனவே, பணிநிரவல் கலந் தாய்வை ரத்து செய்துவிட்டு கலந் தாய்வு நடத்த வேண்டும். ஓராண்டு பணிபுரிந்தாலே மாறுதலில் கலந்து கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை வழிவகை செய்ய வேண்டும். மேலும், உயர் நீதிமன்ற உத்தர வின்படி காலிப்பணியிட விவரங் களை மாவட்டவாரியாக இணைய தளத்தில் வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ஆசிரி யர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment