திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று வெப்பம் 3 டிகிரி உயரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண் ணாமலை, வேலூர், மதுரை, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி வரை உயர்ந்து காணப் படும். மற்ற பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) முடிந்தும், தமிழகம் முழுவதும் பரவலாக வெயிலின் தாக்கம் உயர்ந்து காணப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக திருத் தணியில் 106.1 பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. மதுரை, வேலுா ரில் 106, நெல்லையில் 105, திருச்சி, சென்னை மீனம்பாக்கத்தில் 104, கரூர், நாகையில் 102, சேலத்தில் 101, நாமக்கல், கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதே நேரம், வெப்பச்சலனம் காரணமாக மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் மிதமான மழை பெய் தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கரூர், தேனி, பெரம் பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் பலத்த காற்று, இடியின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, நெல்லை மாவட்டங்களில் 5-ம் தேதி (இன்று) வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி வரை உயர்ந்து காணப்படும். சாதகமான சூழல்கள் தென் படுவதால் தென்மேற்கு பருவமழை வரும் 10-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment