மேற்கு வங்கத்தில் 5 நாள் போராட்டத்துக்கு பிறகு மருத்துவர்களின் கோரிக்கைகள் ஏற்பு பணிக்கு திரும்ப முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத் துவர்கள் நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களின் கோரிக்கை களை ஏற்பதாகவும் அவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை இரவு நோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அங்கு பணியில் இருந்த 2 இளநிலை மருத்துவர்களை தாக்கினர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மாநிலம் முழுவ திலும் இளநிலை மருத்துவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இவர்களுக்கு ஆதரவாக மேற்கு வங்க அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நேற்று முன்தினம் அரசுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினர். நாட்டின் பல் வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடு முழுவதிலும் வரும் திங்கள் கிழமை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்வார்கள் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இதனை இளநிலை மருத் துவர்கள் நிராகரித்தனர். பிறகு நேற்று மாலை 5 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையும் இளநிலை மருத்துவர்கள் நிராகரித் தனர். நேற்று 5-வது நாளாக அவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு வந்து, பிரச்சினை தொடர்பாக வெளிப்படையான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்நிலையில் இளநிலை மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக மம்தா பானர்ஜி நேற்று மாலையில் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும் போது, “கொல்கத்தா மருத்துவ மனையில் இளநிலை மருத்துவர் கள் தாக்கப்பட்டது துரதிருஷ்டவச மான சம்பவம் ஆகும். இளநிலை மருத்துவர்கள் 5 நாட்களாக வேலைநிறுத்தம் செய்தபோதும் அவர்களுக்கு எதிராக எஸ்மா (அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எவரையும் கைது செய்யவில்லை. இனிமேலும் அவர்களுக்கு எதிராக நான் எவ்வித நடவடிக் கையும் எடுக்க மாட்டேன். பிரச் சினைக்கு தீர்வு காண எனது அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண் டது. ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவர் களின் அனைத்து கோரிக்கை களையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண் டும்” என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கையை மேற்கு வங்க முதல்வர் 48 மணி நேரத்தில் நிறை வேற்ற வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்து வமனையின் உள்ளுறை மருத்துவர் கள் நேற்று வலியுறுத்தினர். டெல்லியில் நேற்று 15 மருத்துவ மனைகளில் நேற்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்திய மருத்துவர் சங்கத் தின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவரதனை சந்தித்து பேசினர். மேலும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மம்தா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண் டுள்ளது. இதனிடையே நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டதில் தலை யில் பலத்த காயம் அடைந்த பரிபகா முகோபாத்யாய என்ற இள நிலை மருத்துவர் கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோச யின்ஸ்’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளார். அவரை ஆளுநர் கேசரி நாத் திரிபாதி நேற்று முன்தினம் இரவு சென்று பார்த்தார். ஆளுநர் திரிபாதி நேற்று முதல்வர் மம்தாவுக்கு கடிதம் எழுதினார். அதில், “மருத்துவர் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் உடனே நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாக மம்தா கூறினார். இதனிடையே முதல்வரின் முயற்சி நேர்மையான தாக இல்லை என்றும் போராட்டம் தொடரும் என்றும் இளநிலை மருத் துவர் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment