சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கு தரவரிசை வெளியீடு

தமிழ்நாடு சட்டப் படிப்பு மாண வர் சேர்க்கை தலைவரும், சட்டப் பல்கலை குற்றவியல்துறை தலைவருமான டி.சங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் ஒருங்கி ணைந்த 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளில் (பிஏ,எல்எல்பி, பிபிஏ,எல்எல்பி, பிகாம்,எல்எல்பி, பிசிஏ,எல்எல்பி) சேர 3,191 பேர் விண் ணப்பித்தனர். அதில் 2,747 விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டன. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் பல்கலைக்கழ கத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு 17 முதல் 19-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் களுக்கு விரைவு தபால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வுக் கான அழைப்புக்கடிதம் கிடைக்க வில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண்ணுக்குள் இருக்கும் மாண வர்கள் குறிப்பிட்ட நாளில் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். சட்டத்துறை அமைச்சரும், பல்கலை இணைவேந்தருமான சி.வி.சண்முகம் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கலந்தாய்வை தொடங்கிவைத்து தர வரிசை பட்டியலில் முதல் 3 இடங் களைப் பிடித்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.

No comments:

Post a Comment