முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் இடம் பெறவில்லை

நீட் தேர்வு முடிவு நேற்று பிற்பகலில் வெளியானது. இதில் முதல் 50 இடங்களை பெற்றவர்களின் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது. இதில் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் கந்தேல் வால் பெற்று இருக்கிறார். ஆனால் இந்த 50 பேர் கொண்ட பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. அதிகபட்சமாக இந்த பட்டியலில் டெல்லியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் தலா 6 பேரும், அரியானா, மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளாவை சேர்ந்த மாணவர்கள் தலா 3 பேரும், ஜார்க்கண்ட், பஞ்சாப், கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் தலா 2 பேரும், தெலுங்கானாவில் ஒரு மாணவரும், இதர பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி இந்த 50 பேர் கொண்ட பட்டியலில் 12-வது இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment