தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு 50 சதவீதம் பறிப்பு

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியாற்றுவார்கள் பதவி உயர்வு மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாறுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் 70% தலைமையாசிரியர் மூலமாகவும் 30% TRB மூலம் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் வட்டார தொடக்கக்கல்வி அலுவலரின் பணி பொறுப்புகள் அதிகமாக உள்ள காரணத்தினால் நிர்வாக காரணங்களுக்காக தற்சமயம் பள்ளிக்கல்வி செயலர் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் 50% டிஆர்பி மூலமும் மீதம் 50% நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக நிரப்பப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் சமுதாயத்தில் மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் தந்துள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஊதிய விதத்திலும் மிகுந்த மன உளைச்சலை தந்துள்ள அரசு தற்சமயம் பதவி உயர்வையும் குறைத்து ஆசிரியர்களின் மனதில் மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்,

No comments:

Post a Comment