ஜூன் 28-ம் தேதி நடைபெறும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வு

ஜூன் 28-ம் தேதி நடைபெறும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் இந்த தேர்வுக்கு www.nbe.edu.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மே 8-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி யுடன் முடிவடைந்தது. மருத்துவப் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட டாக்டர்கள் தேர் வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 15-ல் தேர்வு முடிவு இந்த நீட் தேர்வுக்கான ஹால்டிக் கெட் ஜூன் 21-ம் தேதி இணை யதளத்தில் வெளியிடப்பட உள் ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதி வெளியிடப்படும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவ சேவை கள் தலைமை இயக்கு நரகம் (டிஜிஎச்எஸ்) நடத்த உள்ளது.

No comments:

Post a Comment