தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில்தான் இந்திக்கு அதிக மவுசு ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் படிப்பதாக தகவல்

மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் தமிழகத்தில்தான் தென்னிந்திய மாநிலங்களிலேயே அதிகம் பேர் இந்தி மொழி படித்து தேர்ச்சி பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம் பவே, மூன்றாம் மொழியாக இந் தியைக் கட்டாயம் படிக்க வேண்டி யதில்லை என கல்விக் கொள்கை யில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தான், தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் இந்தி படித்து தேர்ச்சி பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா அதிகாரிகள் கூறியதாவது: தென்னிந்திய மக்கள் இந் தியைக் கற்றுக் கொள்ளும் நோக்கத் துடன் மகாத்மா காந்தியால் 1918-ல் இந்தி பிரச்சார சபா தொடங்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒரு ஆசிரியர் 5 மாணவர்கள் மட்டுமே இருந்த சபாவில் இன்று 20 ஆயிரம் ஆசிரி யர்களும், 2 கோடி மாணவர்களும் உள்ளனர். மொத்தம் 8 நிலைகளாக இந்தி கற்றுத் தரப்படுகிறது. இதில் தேர்ச்சியடைய 6 கட்டத் தேர்வுகள் நடத்தப்படும். ஒரு நபர் குறைந்தது 4 கட்டத் தேர்வுகளை முடிக்க வேண்டும். அதன்படி கடந்த 10 ஆண்டு களில் சபாவில் இந்தி படித்து தேர்ச்சி பெற்றவர்களின் எண் ணிக்கை 100 சதவீதம் வரை அதிகரித் துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை 2009-ல் 2.68 லட்சம் பேர் தேர்வெழுதினர். அந்த எண் ணிக்கை 2018-ம் ஆண்டு 5.8 லட்ச மாக உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங் களான ஆந்திரா, தெலங்கானாவில் 2.4 லட்சம் பேரும், கர்நாடகாவில் 60,000 பேரும், கேரளத்தில் 21,000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தென்னிந்தியாவில் தமிழகத் தில்தான் அதிகம் பேர் இந்தி பயில்கின்றனர். மற்ற மாநிலங் களில் இந்தி 2-ம் மொழியாக படிக்க வாய்ப்புகள் இருப்பதால் அங்கு தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரம் தமிழகத்தில் இந்தி படிக்க இளைஞர்களிடம் அதிக ஆர்வமுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளாக இந்தி மொழியைக் கற்பித்து வருகிறோம். ஒரு மொழியை அறிந்திருப்பது அவர்களின் அறிவை விரிவுபடுத் தும். மேலும், மற்ற மாநிலங்களில் சென்று பணிபுரியவும், தங்கள் தகுதியையும், பொருளாதார நிலை யையும் இளைஞர்கள் உயர்த்திக் கொள்ளவும் உதவும். முக்கியமாக நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பெரிய அளவில் பங்களிப்பை வழங்கும். எனவே, வேறுபாடுகளைக் களைந்து ஒரு மொழியை மக்களுக்கு கற்றுதர வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment